பாஃப்டா எனப்படும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள், ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. 78-வது பாஃப்டா விருது வழங்கும் விழா லண்டனில், சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது.
இதில் எட்வர்டு பெர்கர் இயக்கிய ‘கான்கிளேவ்’, சிறந்த படம், சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 விருதுகளை வென்றது. அதேபோல், ‘தி புருடலிஸ்ட்’ படமும் சிறந்த நடிகர் (ஆட்ரியன் பிராடி), சிறந்த இயக்குநர் (பிராடி கோர்பெட்), சிறந்த இசை (டேனியல் ப்ளம்பெர்க்), சிறந்த ஒளிப்பதிவு (லோல் க்ராலி) ஆகிய 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை ‘அனோரா’ படத்துக்காக மைக்கி மேடிசன் வென்றார்.
ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய படமான பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்துக்கு விருது கிடைக்கவில்லை. ஸ்பானிஷ் மொழி படமான ‘எமிலியா பெரெஸ்’ படத்துக்கு அந்த விருது கிடைத்தது.