பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்! |actress pushpalatha passed away at the age of 87

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்! |actress pushpalatha passed away at the age of 87


எம்.ஜி. ஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர் புஷ்பலதா. தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான “செங்கோட்டை சிங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் புஷ்பலதா. இவர் நடிகர் ஏ.வி.எம் ராஜனின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.

`சாரதா’, ‘பார் மகளே பார்’ போன்ற படைப்புகள் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தன. இவர் கடைசியாக முரளி நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘பூ வாசம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பின் பக்கம் இவர் வரவில்லை. புஷ்பலதாவின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *