கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு – லாப ஸ்தானத்தில் குரு (வ) – விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று லாப ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: கடக ராசியினரே… இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். தனாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும் போது கவனம் தேவை.
தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரமாக இருந்தாலும் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சமாக இருப்பதால் இது யோகமான காலம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.
குடும்பாதிபதி சூரியன் அவரது ஸ்தானத்திற்கு சப்தம ஸ்தானத்திற்கு மாற போகிறார். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெரியோர்களிடம் ஆலோசனைகளைப் பெறுவது சிறந்தது. பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.
அரசியல்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும்.
பூசம்: இந்த மாதம் மனதில் உற்சாகம் உண்டாகும். மனஅமைதி ஏற்படும். வாழ்க்கை சிறப்படையும். திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம்.
ஆயில்யம்: இந்த மாதம் நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம்.
பரிகாரம்: துர்க்கைக்கு அரளிப்பூ சார்த்தி வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: 20. 21, 22 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |