இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சதுக்கு அப்புறம் ரொம்பவே சப்ரைஸிங்காக இருந்தது.” என்றவரிடம், “இந்த திரைப்படத்திற்குப் பிறகுதான் மொட்டை ராஜேந்திரன் காமெடியனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். அவரை காமெடி பக்கம் கொண்டு வந்த கதை பற்றி சொல்லுங்கள்” எனக் கேட்டோம்.
அவர், “நான் கடவுள் படத்துல மொட்டை ராஜேந்திரனோட தோற்றமும், குரலும் தனித்துவமாக இருந்தது. எனக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு சீரியஸாக இருக்கிற ஒருத்தர்தான் தேவைப்பட்டது. முதல்ல இந்தப் படத்துக்கு கேட்கும்போது அவர், ‘எனக்கு காமெடிலாம் வராது. என்னை விட்டுடுங்க’னு சொன்னாரு. ஆனால், நான் மறுபடியும் கடைசியாகப் போய்க் கேட்டேன். ̀ஏன் டைரக்டர் சார் இப்படி பண்றீங்க’னு கேட்டாரு. அப்புறம் பேசினதும் நடிக்கிறதுக்கு ஒத்துகிட்டாரு. அவர் மாதிரியே சுவாமிநாதனுக்கும் இந்த படம் பிரேக் கொடுத்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு ரொம்பவே அவர் பிஸியாகிட்டாரு. சுப்பு சாருக்கும் இந்த படம் ரீ எண்ட்ரிதான்.” என்றவரிடம், ̀யுவன் – ராஜேஷ் – நா.முத்துக்குமார்’ கூட்டணிக்கு இப்போ வரைக்கும் ரசிகர்கள் இருக்காங்களே. இந்தப் படத்துக்குப் பாடல்களுக்கு எந்தளவுக்குப் பலமானதாக இருந்திருக்கு?” எனக் கேட்டதும், “ஆமா, படத்துக்குப் பாடல்கள் ரொம்பவே பலமாக இருந்தது. நாங்க மூணு பேரும் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். இந்தப் படத்துல வர்ற ̀யார் இந்தப் பெண்தான்’ பாடல் பெரியளவுல ஹிட்டாச்சு. அந்த மெலடி பாடலைக் கேட்கும்போதே கண்டிப்பாக ஹிட் ஆகும்னு தெரியும். அதே மாதிரி படத்துல `A+B’ பாடல் ரீ ரெக்கார்டிங்ல போட்டுக் கொடுத்தாரு. அந்தப் பாடலுமே படத்துக்குப் பெரிய ப்ளஸாக இருந்துச்சு!” எனக் கூறி முடித்துக் கொண்டார்.