சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
சல்மான் கான் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் யாவுமே பெரும் தோல்வியை தழுவின. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படமும் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் அடுத்தப் படத்தில் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறார் சல்மான் கான்.
சில தினங்களுக்கு முன்பு கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்தை சந்தித்துப் பேசியிருக்கிறார் சல்மான்கான். இந்தச் சந்திப்பு ‘பஜிரங்கி பைஜான்’ படத்தின் 2-ம் பாகத்துக்காக தான் என்கிறார்கள். சல்மான் கான் – கபீர் கான் – விஜயேந்திர பிரசாத் மூவரும் இணைந்து உருவாக்கிய படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றது.
தற்போது இதே கூட்டணி இணைந்து ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ படத்தை உருவாக்கவுள்ளார்கள். இன்னும் அதிகாரபூர்வமாக எதுவுமே கையெழுத்தாகவில்லை. அனைத்துமே முதற்கட்டப் பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது. அடுத்டுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கும் என்கிறார்கள்.