நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நெல்சன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினியுடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்க நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் சந்திப்பும் நடைபெற்றுள்ளது. இதனை ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் நாக வம்சி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘வார் 2’, பிரசாந்த் நீல் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர், நெல்சனுடன் படம் பண்ணுவது குறித்து பேசி வருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பேச்சுவார்த்தை தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் நாக வம்சி.