நிவின் பாலியின் அடுத்த படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான படங்கள் யாவுமே பெரியளவில் எடுபடவில்லை. மேலும், அவரும் எடை அதிகரிப்பால் கிண்டலுக்கு ஆளானார். இதனால் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி முழுமையாக உடல் எடையைக் குறைத்து மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
மேலும், தனது அடுத்த படத்தையும் அறிவித்திருக்கிறார் நிவின் பாலி. அப்படத்துக்கு ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ என தலைப்பு இடப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாராகும் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமாக இது உருவாகிறது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.
‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தினை ஆதித்யன் சந்திரசேகர் இயக்கவுள்ளார். அதிரடியான ஆச்ஷன் காட்சிகள், புராண கதைகள் மற்றும் மல்டிவெர்ஸ் சூழலுடன் இணைந்திருக்கும் என தெரிகிறது. ஆனந்த் எஸ் ராஜ் மற்றும் நிதி ராஜ் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் இக்கதைக்கு பிரபல கதாசிரியர் அனீஸ் ராஜசேகரனும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.