சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு (வ) – லாப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று லாப ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சிம்ம ராசியினரே… நீங்கள் உயர்மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள். இந்த மாதம் ராசிநாதன் சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தனாதிபதி புதன் சப்தம ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
தொழில் ஸ்தானத்தில் குரு இருந்தாலும் அது அவருக்கு சம வீடாகும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மன துயரம் நீங்கும். சிற்றின்பச் செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மகம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.
பூரம்: இந்த மாதம் குடும்பத்தினரிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.
உத்திரம்1ம் பாதம்: இந்த மாதம் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. போட்டி, பொறாமை அகலும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மனக் குழப்பம் நீங்கும். கடன் பிரச்சினை குறையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 2, 3 | அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |