‘சிக்கந்தர்’ பட வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் லீக்காகி விட்டது. மேலும், மோசமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. இன்று இப்படம் வெளியீட்டுக்கு முன்னரே, நல்ல பிரின்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அதனை தடுப்பதற்குள் அனைத்து இணையங்களுக்கும் பரவிவிட்டது.
மேலும், படமும் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. அனைத்து விமர்சகர்களுமே மிகவும் மோசமான விமர்சனத்தை கொடுத்துள்ளனர். அனைவருமே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சல்மான் கான் நடிப்பு என அனைத்தையுமே மோசமாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. சாஜித் நாடியவாலா தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் தொடங்கி அனைத்துமே மிக கலவையான விமர்சனங்களே பெற்றது குறிப்பிடத்தக்கது.