சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குறைந்த திரைகளில் வெளியாகி மக்களிடையே பெற்ற வரவேற்பின் காரணமாக தமிழகத்தில் திரைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த வகையில் படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி என கூறப்படுகிறது. தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த ‘மகாநடி’, ‘சீதா ராமம்’ தற்போது ‘லக்கி பாஸ்கர்’ படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.