இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்மூட்டி நடித்துள்ள ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பரில் டீஸர் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் தற்போது படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. சுமார் 1.30 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லர் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – டாமினிக் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் தனியார் துப்பறிவாளனாக செயல்பட்டு வருகிறார் மம்மூட்டி. இத்தகைய சூழலில் அவருக்கு ஒரு பர்ஸ் கிடைக்கிறது. ‘அது யாருடையது?’ என மம்மூட்டி விசாரிக்க தொடங்குகிறார். அதையடுத்து பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுகிறது. இறுதியில் குற்றத்துக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதில் உறுதியாக இருப்பதாக மம்மூட்டி சொல்கிறார். வரும் 23-ம் தேதி படம் வெளியாக உள்ளது. >>ட்ரெய்லர் வீடியோ