‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் பிரபலமான சுரேஷ் மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
‘ஹரா’ படத்தின் மூலம் மீண்டும் மோகனை நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய்ஸ்ரீ. தற்போது மாறுபட்ட முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் 80-களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலேசியாவைச் சேர்ந்த ஜி.வி இன்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. இதில் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், தீபா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் சுரேஷ் உடன் நடித்து வருகிறார்கள்.
ஏப்ரல் 19-ம் தேதி இப்படத்தின் அறிமுக டீஸர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது.