null
``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு

“தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' – வெற்றிமாறன் பேச்சு


வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி உள்ள படம் ‘பேட் கேர்ள்’. இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது.

கடந்த வாரம், ‘பாட்டில் ராதா’ பட புரோமஷனின்போது மிஷ்கின் பேசியது சர்ச்சை ஆக, அதற்கு பிறகு அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி ‘பேட் கேர்ள்’ புரோமஷன் நிகழ்ச்சி.

பேட் கேர்ள் படம் குறித்தும், மிஷ்கின் குறித்து நிகழ்ச்சியில் சில விஷயங்களை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டார்.

Screenshot 2025 01 26 144916 Thedalweb ``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு
வெற்றிமாறன்

“எப்பவுமே என் கூட வேலை செய்றவங்க ‘இந்த ஐடியா இருக்கு…அந்த ஐடியா இருக்கு’னு சொல்லுவாங்க. நான் ஒரு கடுமையான விமர்சகர். ‘கதை நல்லா இருக்கு…ஆனா, படமா வராது’, ‘கதை வெர்க் ஆகல’னு நிறைய சொல்லுவேன். என்கிட்ட ஒருத்தர் வந்து கதை சொல்லணும்னா நிறைய தைரியம் தேவை.

எல்லாத்தையும் மீறி சொன்னாலும் ‘நான் நல்லா இல்ல’னு தான் பெரும்பாலும் சொல்லுவேன். எடுத்த உடனேயே ‘நல்லா இல்ல’னு சொல்லலனாலும், கொஞ்ச நாள் கழிச்சாவது சொல்லிடுவேன்.

முதல்ல அமேசான்…

வர்ஷா என் கிட்ட ரெண்டு, மூணு ஐடியா சொல்லிட்டு, இந்த ஐடியாவை வந்து சொல்லும்போதே, ‘இத நாங்க செட் பண்ணிட்டோம். அமேசான் இதை பண்றாங்க. ஆனா, அவங்க ஒரு புரோடெக்சன் ஹவுஸ் மட்டும் கேக்கறாங்க’னு சொன்னாங்க. அதனால, இந்தப் படத்துல கடைசி வந்து சேர்ந்தது நான் தான்.

சில மாற்றங்களால அமேசான் இந்தப் படத்தை பண்ணல. அந்த நேரத்துல அனுராக் சென்னை வந்திருந்தாரு. அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்னு இந்தப் படம் தொடங்குச்சு. அப்புறம் அனுராக்குக்கு வேற வேலைகள் வர்ற கிராஸ்ரூட்டே எடுத்து செய்யலாம்னு நாங்க கடைசியா பண்ணோம்.

இந்தப் படத்துல என்னோட கிரியேட்டிவ் பங்களிப்பு ரொம்ப கம்மி தான். ஹர்ஷாவே எல்லாம் பண்ணிட்டாங்க. ஆர்டிஸ்ட் பரிந்துரை மாதிரியான விஷயங்கள் மட்டும் தான் நான் பண்ண வேண்டியதா இருந்துச்சு. நம்ம சொல்றதே கேட்டுட்டு தனக்கு ஏத்த மாதிரி மாத்தி பண்ற திறமை ஹர்ஷா கிட்ட இருக்கு.

Screenshot 2025 01 26 145028 Thedalweb ``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு
வர்ஷா

நாட்டின் சிறந்த இயக்குநர்

ஹர்ஷாவோடு டீம் அவங்களை ‘நாட்டோட சிறந்த இயக்குநர்’ங்கற மாதிரி நினைச்சு வேலை பண்ணாங்க. இந்தப் பட ஷூட்டுக்கு நான் ஒரு நாள் போயிருந்தேன். அப்போதான் முதல்முறையா சாந்தி பிரியாவை பார்த்தேன். அவங்க ‘இந்தப் படம் கண்டிப்பா தேசிய விருது வாங்கும்’னு நம்பிக்கையா சொன்னாங்க. அப்போ நான் ஹர்ஷா கிட்ட, ‘உன்ன விட அதிகமா அவங்க நம்பறாங்க. கரெக்டா படத்தை எடுத்துரு’னு சொன்னேன். அந்தளவுக்கு இந்தப் படத்துல வேலை பாத்துருக்க டீம் நம்பிக்கையா வேலை செஞ்சுருக்காங்க.

இன்னைக்கு படத்தை பாக்கும்போது வர்ஷா சொன்னதை விட, அதிகமாவே நல்லா பண்ணியிருக்காங்க. இதுக்கு காரணம், நான் முன்னாடி சொன்ன, எல்லா பரிந்துரைகளையும் வாங்கி, தன்னோடதா மாத்திக்குற வர்ஷாவோட திறமை.

மிஷ்கின் குணம்!

மிஷ்கின் போன வாரத்துக்கு அப்புறம் வர்ற முதல் மேடை இது. அந்த நிகழ்ச்சி முடிஞ்சப்பிறகு, நானும், அமீரும் ரொம்ப நேரம் பேசுனோம். மிஷ்கின்கிட்டயும் போன் பண்ணி பேசுனேன். ‘எனக்கும் சில கருத்துகள் இருக்கு’னு அவர் சொன்னாரு…நாங்க ரெண்டு பேரும் பேசிகிட்டோம்.

ஒரு நிகழ்வு நடக்குது. அது தவறாகும்போது, அதை உடனடியாக சரி செய்யற தைரியம் மிஷ்கினுக்கு இருக்கறது எனக்கு சந்தோசமா இருக்கு. இந்தக் குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும். ஒருத்தர் மனம் புண்படும்போது அதுக்கான பொறுப்பை ஏத்துக்கறது பெரிய விஷயம்னு நான் நினைக்குறேன்.

Screenshot 2025 01 26 145205 Thedalweb ``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு
மிஷ்கின் குணம்!

ஏன் ஆண்களை வெச்சு மட்டும் படம்?!

டாப்சி எப்பவும் என்கிட்ட, ‘ஏன் சார் நீங்க ஆண்களை வெச்சே படம் எடுக்கறீங்க? ஒண்ணு, ரெண்டு பெண்கள் மட்டும் தான் உங்கப் படத்துல இருக்காங்க’னு சொல்லுவாங்க. நான் ஆடுகளம் பண்ணும்போது என்னோட டீம்ல பெண்கள் இல்ல. ஆனா, அதுக்கப்புறம் ஒரு நாள் டாப்சியை நான் மீட் பண்ணும்போது, வர்ஷா எங்க டீம்ல இருந்தாங்க. அப்போ நான் வெளிய போயிருந்த வர்ஷாவை ஆபீஸ்க்கு கூப்பிட்டு, ‘எங்க யூனிட்லயும் பெண் உதவி இயக்குநர் இருக்காங்க பாருங்க’னு காட்டினேன்.

அப்போ இருந்து டாப்ஸிக்கு வர்ஷாவை தெரியும். நான் ‘பேட் கேர்ள்’ படத்தோட டீசர் அவங்களுக்கு அனுப்புனேன். அவங்க உடனே வர்றேனு சொன்னாங்க. இந்தப் படம் ரோட்டர்டாம் பட திருவிழாவிற்கு போயிருக்கு. இது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அனுராக் கஷ்யாப் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் நம்ம கிரியேட்டிவா இணைந்து வேலை செய்யலாம்னு சொல்லியிருக்காரு. இந்தப் படம் கிராஸ் ரூட் நிறுவனத்தைப் பெருமைப்பட வைக்கும்னு நம்பறேன்” என்று பேசினார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *