கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘தருணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அரவிந்த் சீனிவாசனின் இரண்டாவது படம். இதில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சர்ஜீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜன.14 திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? – 2.39 நிமிடம் ஓடக்கூடிய ட்ரெய்லர் ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதையை நமக்கு காட்டுகிறது. ஹீரோ – ஹீரோயின் இடையிலான காதல், பிரிவு என்று லவ் டிராக்கில் செல்லும் ட்ரெய்லர், திடீரென சஸ்பென்ஸ் த்ரில்லர் மோடுக்கு மாறுகிறது. பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ட்ரெய்லரை கட் செய்த விதம் சிறப்பு. முழு கதையையும் ட்ரெய்லரில் சொல்லிவிடாமல் யூகிப்பதற்கு இடம் கொடுக்காமல் ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது. தர்புகா சிவாவின் இசை கவனிக்க வைக்கிறது. ’முதல் நீ முடிவும் நீ’ படத்தில் பள்ளி மாணவனாக வந்த கிஷன் தாஸை, இதில் ராணுவ அதிகாரியாக வருகிறார். ‘தருணம்’ ட்ரெய்லர் வீடியோ: