சென்னை: தனுஷ் நடிக்கும் 52-வது படம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
‘D52’ என அழைக்கப்படும் இப்படத்தை ‘Dawn pictures’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “எங்களின் முதல் பட தயாரிப்பு குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கான புதுமையான கன்டென்ட்டுகளை வழங்க உள்ளோம். அந்த வகையில் எங்களின் முதல் படமாக ‘D52’ படத்தை தயாரிக்க உள்ளோம். இதில் நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த வாய்ப்பை வழங்கிய தனுஷுக்கு நன்றி” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
D52 தகவல்: இப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தில் ஷாலினி பாண்டே, நித்யாமேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். முன்னதாக ‘பவர் பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள தனுஷ் அடுத்து தனது 4-வது படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
NEW BEGINNINGS!
Dawn Pictures launches with a bang!
We are proud to announce our maiden project #D52, starring @dhanushkraja sir @aakashbaskaran @wunderbarfilms @DawnPicturesOff #DawnPictures @theSreyas pic.twitter.com/Iet4X0cdD1
— DawnPictures (@DawnPicturesOff) September 17, 2024