‘எம்புரான்’ டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை 58 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
மார் 27-ம் தேதி வெளியாகவுள்ள ‘எம்ரான்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்கள் ஃபுல்லாகி வருகிறது. குறிப்பாக கேரளாவில் முதல் நாளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற மாபெரும் சாதனையை ‘எம்புரான்’ நிகழ்த்தும் என கூறப்படுகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள டிக்கெட் முன்பதிவில் மட்டும் 58 கோடி வசூல் செய்திருப்பதாக ‘எம்புரான்’ படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக ‘எம்புரான்’ படத்தின் கேரளா வசூல், ‘லியோ’ படத்தின் முதல் நாள் கேரளா வசூலை முறியடிக்கும் என தெரிகிறது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எம்புரான்’. ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன.