டவுன் பஸ்: நடத்துநராக அசத்திய அஞ்சலி தேவி! | Anjali Devi acted as Conductor in town bus film

டவுன் பஸ்: நடத்துநராக அசத்திய அஞ்சலி தேவி! | Anjali Devi acted as Conductor in town bus film


‘நவசக்தி’ என்ற நாடகக்குழு மூலம் 1940 மற்றும் 50-களில் நாடகங்கள் நடத்தி வந்தவர் என்.என்.கண்ணப்பா. இவர், மு.கருணாநிதியின் முற்போக்கு வசனங்களால் பேசப்பட்ட ‘தேவகி’ (1951) படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் நாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி. தொடர்ந்து ‘மனிதனும் மிருகமும்’, ‘நால்வர், ‘படித்த பெண்’ உட்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்து ஹிட்டான படங்களில் ஒன்று, ‘டவுன் பஸ்’.

இதில் அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்தார். எம்.என்.ராஜம், டி.பி.முத்துலட்சுமி, கே.எஸ்.அங்கமுத்து, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, டி.கே.ராமச்சந்திரன், பி.டி.சம்பந்தம், தாம்பரம் லலிதா என பலர் நடித்தனர்.

‘நால்வர்’ படம் மூலம் சினிமாவுக்கு வந்த ஏ.பி.நாகராஜன், இயக்குநர் ஆகும் முன் தொடர்ந்து பல படங்களுக்கு, கதை, வசனமும் சில படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதியுள்ளார். அவர் கதை, வசனம் எழுதிய படம் இது. கே.சோமு இயக்கிய இந்தப் படத்தை எம்.ஏ.வி.பிக்சர்ஸ் சார்பில் எம்.ஏ.வேணு தயாரித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவி. கா.மு.ஷெரிப் எழுதினார்.

தனியார் பேருந்து நிறுவனப் பின்னணியில் இந்த ரொமான்டிக் காமெடி கதையை அமைத்திருந்தனர். கோவையைச் சேர்ந்த பேருந்து நிறுவன முதலாளியின் மகள் விமலா (தாம்பரம் லலிதா). அவர்களின் பேருந்தில் ஓட்டுநர்களாக பணியாற்றுகிறார்கள் வேலுவும் (கண்ணப்பா) மன்னாரும் (ஏ.கருணாநிதி). நடத்துநர்களாக அமுதாவும் (அஞ்சலி தேவி) பூங்காவனமும் (டி.பி.முத்துலட்சுமி) வேலை செய்கிறார்கள். (அந்த காலத்திலேயெ பெண் நடத்துநர்கள்). வேலுவுக்கும் அமுதாவுக்கும் காதல் பிறக்கிறது. முதலாளியின் மகள் விமலாவுக்கும் வேலு மீது காதல். விமலாவின் உறவினரான ராமுவுக்கு (டி.கே.ராமச்சந்திரன்) அவரை மணமுடித்து வைக்க நினைக்கிறார், விமலாவின் தந்தை. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாக வளர்கிறார், வேலு. அவருக்கும் அமுதாவுக்கும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. பணம் வந்ததும் பாதை மாறுகிறார், வேலு. அவருக்கு நடன மங்கை பங்கஜத்துடன் (எம்.என்.ராஜம்) தொடர்பு ஏற்படுகிறது. இது அமுதாவுக்குத் தெரியவர குடும்பத்தில் சிக்கல். அது எப்படிச் சரியாகிறது என்பது கிளைமாக்ஸ்.

அஞ்சலி தேவி கூலிங்கிளாஸ், தொப்பி அணிந்து படிக்கட்டில் நின்றபடி ரைட் ரைட் என்று ஸ்டைலாக விசிலடித்து நடித்திருப்பார். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் நடந்தது. அந்தக் கால கோயமுத்தூர் சாலைகளையும் இந்தப்படத்தில் பார்க்க முடியும்.

இதில் ரவுடிகளை பற்றி ஒரு பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. ‘பணம் படைத்த செல்வர் முதல்/ பதவிக்கார ஐயா வரை/ எங்க தயவு இல்லைனா எதையும் செய்ய முடியாது’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். இதில் இடம்பெற்ற ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல் சூப்பர் ஹிட் ரகம். மேடையில் ஆடி பாடும் ‘லேடி லேடி’ பாடலும் அதில் வரும் நடனமும் பேசப்பட்டது. ‘வடக்கத்தி கள்ளனடா’ காமெடி பாடல். ‘பொன்னான வாழ்வே…’ சோகம் சுமந்தபாடல். தத்துவத்தைச் சொன்ன, ‘உத்தமராய் நடித்திருவார், உயர்ந்தவர் போல் பேசிடுவார்’ என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.

வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 1955-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1339516' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *