பிரபல இந்திப்பட இயக்குநர் சேகர் கபூர், மசூம், மிஸ்டர் இண்டியா, பண்டிட் குயின், எலிசபெத் உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம் 2’ படங்களில் நடித்துள்ளார்.
இவர், 1983-ம் ஆண்டு வெளியான தனது ‘மசூம்’ படத்தின் அடுத்த பாகத்தை இப்போது இயக்க இருக்கிறார். இதில் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நஸ்ருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி ஆகியோர் இதிலும் நடிக்கின்றனர். மனோஜ் பாஜ்பாய், நித்யா மேனன் புதிதாக இணைந்துள்ளனர் என்று சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.