சூர்யா - வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு எப்போது? - காத்திருக்கும் ஆச்சரியங்கள்! | vetrimaaran - suriya's combination movie 'vaadi vaasal' shoot update

சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது? – காத்திருக்கும் ஆச்சரியங்கள்! | vetrimaaran – suriya’s combination movie ‘vaadi vaasal’ shoot update


‘விடுதலை 2’வை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவேன் என வெற்றிமாறன் சொன்னார். அவர் சொன்னது போலவே, சூர்யாவின் படத்தை தொடங்குகிறார். இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்திற்கு வருகிறார். அவர் வருவதற்கு முன்னர் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட நினைத்திருக்கிறார் வெற்றி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்திற்கான டெஸ்ட் ஷூட்டை செய்து பார்தார் வெற்றிமாறன். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும், அந்த ஷூட் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோவில் ஜல்லிக்கட்டு காளைகளை வரவழைத்து வாடிவாசல் போல செட் அமைத்து நிஜகாளைகளுடன் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின்னர் ரியல் லொக்கேஷனான மதுரையிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பார்த்ததினர். அப்போதுதான் படப்பிடிப்பில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்தனர்.

அதன் பின்னரே, சில காட்சிகளை அனிமேஷனில் உருவாக்கி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் வெற்றி. அதை தயாரிப்பாளர் தாணுவிடமும் தெரியப்படுத்த, ”யாருக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது.’ என்ற அவர் சொன்ன பிறகே லண்டனில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவிலும் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பித்தனர். ‘ஜூராஸிக் வேல்ர்டு’ படத்தில் பணியாற்றிய ஜான் ரோல்டன் என்பவரின் மேற்பார்வையில் ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகள் ஆரம்பித்தனர். ‘விடுதலை 2’விற்கு பின், இப்போது முழுவீச்சில் இந்த வேலைகளும் ஒரு பக்கம் வேகமெடுக்கின்றன. மார்ச் மாதத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்களும் வரவிருக்கின்றனர் என்கின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *