மலையாள நடிகையான மமிதா பைஜூ, ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘ரெபல்’ படத்தில் நடித்தார். அடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘இரண்டு வானம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய்-யின் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர், தனுஷ் ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ், ‘இட்லிக் கடை’ என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இப்போது ஆனந்த் எல். ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேன்’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக, மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்திலும் மமிதா பைஜு நாயகியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.