எளிய மக்களின் வாழ்வியல் கதைகளான “ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்தியசோதனை’ ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா, நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 41.
பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ என்ற படத்தை அடுத்து யோகி பாபுவை வைத்து ‘கிணத்த காணோம்’, செந்தில் நடிப்பில் ஒரு படம் ஆகியவற்றை இயக்கி வந்தார். அந்த இரண்டு படங்களுக்குமே மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சுரேஷ் சங்கையா மறைந்திருக்கிறார். அவரது நினைவுகள் குறித்து ‘கிணத்த காணோம்’ தயாரிப்பாளரான எஸ்.ஆர். ரமேஷ் பாபு, கனத்த இதயத்துடன் பகிர்கிறார்.