“Pattam Pole’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியைச் சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள்.