லப்பர் பந்து படம் மூலம் கவனம் பெற்ற நடிகை ஸ்வாசிகாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஸ்வாசிகா.
பல ஆண்டுகளுக்கு முன்னரே ’கோரிப் பாளையம்’, ‘வைகை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் ‘லப்பர் பந்து’ படம் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
சூரி நடிக்கும் ‘மாமன்’ என்ற படத்தில் அவருக்கு அக்காவாகவும் ஸ்வாசிகா நடித்து வருகிறார்.