மும்பை: “பாலிவுட்டில் இருந்து யாரும், ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன் நடித்ததை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வர மாட்டார்கள். சிக்ஸ் பேக்ஸ், அழகிய நாயகிகள், பீச், பைக், கவர்ச்சி பாடல்கள் இதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக பாலிவுட்டை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் அளித்த பேட்டியில், “பாலிவுட்டில் இருப்பவர்கள் ஒரு குமிழிக்குள் வாழ்கிறார்கள். பாலிவுட்டில் எனக்கு இருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவே முக்கியமான காரணம். அவர்கள் இந்தக் குமிழியிலிருந்து வெளியேற விரும்புவதில்லை. அவர்களை பொறுத்தவரை ஜிம்முக்குச் செல்ல வேண்டும், புரோடீன் ஷேக்ஸ்களை குடிக்க வேண்டும், அதற்கான ஊசிகளை செலுத்தி கொள்ளவேண்டும். அவர்கள் யதார்த்தத்தில் வாழ்வதே கிடையாது.
பாலிவுட்டில் இருந்து யாரும், ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன் நடித்ததை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வர மாட்டார்கள். சிக்ஸ் பேக்ஸ், அழகிய நாயகிகள், பீச், பைக், கவர்ச்சி பாடல்கள்… இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். யதார்த்தத்தை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்” என சாடியுள்ளார் கங்கனா.