சல்மான் - ரூ.2 கோடி; ஷாருக்- ரூ.3 கோடி - பாடிகார்டுகளுக்கு பிரபலங்கள் கொடுக்கும் சம்பளம் இதுதான்

சல்மான் – ரூ.2 கோடி; ஷாருக்- ரூ.3 கோடி – பாடிகார்டுகளுக்கு பிரபலங்கள் கொடுக்கும் சம்பளம் இதுதான்


நடிகர்கள் எப்போது வெளியில் வந்தாலும் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் ரசிகர்களிடமிருந்து நடிகர்களை தனியார் செக்யூரிட்டிகள்தான் பாதுகாப்பு கொடுக்கின்றனர். சில நேரங்களில் ரசிகர்களிடம் தனியார் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. சில நடிகர்கள் ஒரே பாதுகாவலரை பல ஆண்டுகளாக தங்களது சொந்த பாதுகாப்புக்கு வைத்திருக்கின்றனர். நடிகர் சல்மான், ஷாருக்கானிடம் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி பாதுகாப்பு கொடுக்கும் பாதுகாவலர்களுக்கு நடிகர்கள் சம்பளத்தை கோடிகளில் அள்ளிக்கொடுக்கின்றனர்.

நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானிடம் பாதுகாவலராக இருக்கும் ரவி சிங் 10 ஆண்டுகளாக இந்த வேலையை ஷாருக்கானுக்காக செய்து வருகிறார். இதற்காக ரவி சிங்கிற்கு ஷாருக் கான் ஆண்டுக்கு ரூ.2.7 முதல் 3 கோடி வரை சம்பளம் கொடுக்கிறார். இதே போன்று சல்மான் கானுக்கு பாதுகாப்பு கொடுக்கும் குர்மீத் சிங் ஷெரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். சல்மான் கான் குடும்பத்தில் ஒருவராகவே வாழும் ஷெராவிற்கு ஆண்டுக்கு 2 கோடி வரை சம்பளமாகக் கொடுக்கிறார் சல்மான் கான்.

இதே போன்று நடிகர் ஆமீர் கானுக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் யுவராஜ் கொர்படே ஆண்டுக்கு 2 கோடி சம்பளம் வாங்குகிறார். யுவராஜ் முன்பு பாடிபில்டராக இருந்து வந்தார். நடிகர் அமிதாப்பச்சனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஜிதேந்திர ஷிண்டெ சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார். ஜிதேந்திராவிற்கு அமிதாப்பச்சன் ஆண்டுக்கு ரூ.1.5 கோடியை சம்பளமாக கொடுக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *