கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
மைசூரில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது தான் கார்த்திக்கு காலில் அடிபட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. கார்த்தி ஒய்வெடுத்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். முதலாவதாக கார்த்தியின் காட்சிகளோடு டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கார்த்திக்கு கால் சரியானவுடன் மீண்டும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். சென்னை, மைசூர் மற்றும் வெளிநாட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. ‘சர்தார் 2’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் கார்த்தி.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘சர்தார் 2’ படத்தை மித்ரன் இயக்கி வருகிறார். இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ராஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.