கோட்: "ஸ்நேகா-லைலா வாய்ஸ்; விகடன் விமர்சனம்; AI டப்பிங்" - பின்னணி குரல் கலைஞர் சவிதா | GOAT movie dubbing artist savitha shares his experience about goat

கோட்: “ஸ்நேகா-லைலா வாய்ஸ்; விகடன் விமர்சனம்; AI டப்பிங்” – பின்னணி குரல் கலைஞர் சவிதா | GOAT movie dubbing artist savitha shares his experience about goat


இது பற்றி கேட்கையில்…” (சிரித்துக் கொண்டே) ஆனந்த விகடன்ல வந்த கமென்ட்தான். சிம்ரன் சம்பளத்துல பாதி சம்பளம் இவங்களுக்கு கொடுக்கலாம்னு எழுதினாங்க. அதே மாதிரி இப்போதும் இன்ஸ்டாகிராம்ல முகம் தெரியாத பலரும் என்னுடைய வேலைகள் பத்தி சொல்றது எப்போதும் ஸ்பெஷல். அதே சமயம் நான்தான் இந்த கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கேன்னு கண்டிப்பிடிக்காம இருக்கிறதுதான் எனக்கு கிடைக்கிற பாராட்டாக நினைக்கிறேன். அப்படி கண்டுப்பிடிக்காமல் இருந்தால்தான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நான் குரல் கொடுத்திருக்கேன்னு அர்த்தம்.” என்றார் அழுத்தமாக!

“என்னுடைய கரியர்ல நான் இப்போ வரைக்கும் 15 வயசு பெண்ணுக்கும், 50 வயசு பெண்ணுக்கும் குரல் கொடுத்திட்டு இருக்கேன். நத்திங் இஸ் ஈஸி. நான் இப்போ நிறைய பேருக்கு டப்பிங் தொடர்பாகச் சொல்லி தர்றேன்.” என்ற அவரிடம் ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் டப்பிங் கலைஞர்களுக்கு பாதகமாக அமையுமா? எனக் கேள்வி எழுப்பினோம்.

அவர், “அப்படிலாம் இல்ல. டெக்னாலஜி ஓவ்வொரு தலைமுறைக்கும் மாறிகிட்டேதான் இருக்கும். அதுக்கேத்த மாதிரி நம்மை மாத்திக்கணும். டெக்னாலஜி முன்னேற்றம் காணும்போதும் நாமும் முன்னேறணும். அதுதான் வளர்ச்சி. அப்படியான டெக்னாலஜியினாலதான் நான் இன்னைக்கு இங்க இருந்தே டப்பிங் பண்றேன்!” என முடித்துக் கொண்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *