கொரிய படத்தை ரீமேக் செய்ய சொன்ன சல்மான்கான்; மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ் - சிகந்தர் படம் உருவானது எப்படி?

கொரிய படத்தை ரீமேக் செய்ய சொன்ன சல்மான்கான்; மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ் – சிகந்தர் படம் உருவானது எப்படி?


கொரோனா காலத்தில் தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலா நல்ல கதைக்காக என்னை சந்தித்தார். இருவரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டில் சென்று அவரை சந்தித்து பேசினோம்.

கதையை சல்மான் கான் அரை மணி நேரம் கேட்டார். பிறகு சிகரெட்டை புகைத்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார். பின்னர் என்னிடம் ‘நான் எப்படி வேலை செய்வேன் என்று தெரியுமா?’ என்று கேட்டார். நான் தெரியாது என்று தெரிவித்தேன். உடனே நான் பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை வேலை செய்வேன். உங்களுக்கு அது ஓகேவா என்று கேட்டார். இதன் மூலம் எனது கதை அவருக்கு பிடித்து விட்டதாக நினைத்தேன்.

ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எங்களுக்குள் பலவிதமான கருத்துக்கள் இருக்கும்.

எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாதபோது, ​​நாங்கள் இரண்டு வழிகளிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு எடிட்டிங்கின் போது இறுதி முடிவு எடுத்துகொள்வோம்.

ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து வழக்கமான படம் எடுப்பது என்பது சாத்தியமில்லை, ஏனெனில் அந்த படத்தில் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரியும் போது, ​​ஒரிஜினல் திரைக்கதைக்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க முடியாது. பார்வையாளர்களுக்காக, ரசிகர்களுக்காக, ஓபனிங்கிற்காக நாம் சமரசம் செய்ய வேண்டும். ரசிகர்களை திருப்திப்படுத்த அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார்கள் மெனக்கெடுவதை பார்த்து நாம் காற்றுகொள்ளலாம்.” என்று அவர் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *