‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
‘லவ் டுடே’ மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் கவனிக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதன் நடித்து, அடுத்து வரும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். ‘மயில்வாகனன்’ என்ற கேரக்டரில் மிஷ்கின், ‘வாலே குமார்’ என்ற கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன், ‘பரசுராம்’ என்ற கேரக்டரில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கின்றனர்.
வரும் 21-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. காலேஜ் ‘கெத்து’ கேரக்டரில் நாயகன், அவனது பின்புலத்தில் ‘வெத்து’ நிலையில் இருந்து மீண்டு வெல்லத் துடிக்கும் முன்னெடுப்புகள், இடையே காதல் – பெண்கள் குறித்த பார்வைகள்… இவற்றோடு ஆங்காங்கே ‘குத்து’களை இட்டு நிரப்பும் சண்டைக் காட்சிகள்.
ஒட்டுமொத்தமாக 2கே கிட்ஸுக்கு, மலையாளத்தில் வெளிவந்த ‘தள்ளுமாலா’வின் வைப் ஆங்காங்கே ‘டிராகன்’ ட்ரெய்லரில் உணர முடிகிறது. தரையில் இறங்கி அடித்து ஆடியிருக்கும் ‘டிராகன்’ முழு நீளப் படமாக எங்கேஜ் செய்தால் நிச்சயம் இளம் ரசிகர்களுக்கு செமத்தியான ட்ரீட் வெயிட்டிங்தான். ட்ரெய்லர் வீடியோ…