Foods that pregnant women should eat

ஆரோக்கியமான கர்ப்பக் காலத்துக்கு மிகவும் உதவுவது நாம் சாப்பிடும் உணவுகள் தான். அப்படிப்பட்ட கர்ப்பிணிகளுக்கு உகந்த உணவுகள் பற்றித் தெரிந்து கொள்வோம் வாங்க.

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மிக அழகான காலகட்டங்களில் ஒன்றாகும். உலகிற்கு புதிய உயிரினைக் கொண்டு வரும் பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான சூழலை அனுபவிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், கர்ப்பிணிப் பெண்ணுக்கு மிக முக்கியமான விஷயம் ஆகும். நன்கு சமநிலையான, சரிவிகித உணவை உட்கொள்வது மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்ப கலோரி எண்ணிக்கையை உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

கேழ்வரகு – Finger millet

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியின் அவசியமான சத்துக்களான இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரம் ராகி தான். ராகியை ரொட்டி, தோசை, ராகி மால்ட், ராகி இட்லி, ராகி கேக், ராகி லட்டு அல்லது ராகி கஞ்சி போன்ற வடிவத்தில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு ராகி ஆரோக்கியமானது மட்டுமின்றி சிறந்ததும் கூட.

கோதுமை – Wheat

கோதுமை Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கோதுமை குருணையில் கிச்சடி, உப்புமா, புலாவ் மற்றும் கீர் போன்றவற்றை செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுக்கலாம்.

நட்ஸ் மற்றும் கொட்டைகள் – Nuts

nuts Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள், பூசணி விதைகள், தர்பூசணி விதைகள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நட்ஸ் மற்றும் கொட்டைகளைக் கொண்டு லட்டுகள், மில்க் ஷேக், குக்கீஸ்கள், பிஸ்கட்டுகள் போன்றவற்றை செய்து சாப்பிடலாம். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் தினமும் அளவாக நெய்யை உணவில் சேர்த்து உட்கொள்ளலாம். பிரசவத்துக்குப் பிறகும் ஒவ்வொரு உணவிலும் ஒரு சிறிய அளவு நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

பச்சை இலை, காய்கறிகள் – Green leafy Vegetables

keerai Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பச்சை காய்கறிகள் மற்றும் பச்சை இலைகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன. பச்சை இலை கீரைகளில் பாலக்கீரை, வெந்தயக் கீரை, முருங்கை கீரையில் மிகவும் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. இவை, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகின்றன.

பாலக்கீரை பரோட்டா, பாலக்கீரை பனீர், பாலக்கீரை புலாவ், பாலக்கீரை சூப், வெந்தயக் கீரையில் செய்யும் மேத்தி சிக்கன், மேத்தி பரோட்டா மற்றும் முருங்கைக் கீரை சப்ஜி போன்றவற்றை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் காய் வகைகளையும் தங்களின் தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள் – Pulses

பருப்பு வகைகள் Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பருப்பு வகைகளான பட்டாணி, பீன்ஸ், ராஜ்மா, கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றில் புரதச் சத்து, கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் சத்து மற்றும் போலேட் ஆகியவை நிறைந்து உள்ளன. பட்டாணி புலாவ், வேர்க்கடலை சுண்டல், கொண்டைக்கடலை சுண்டல், பீன்ஸ் சப்ஜி, பட்டாணி சூப், வேர்க்கடலை சட்னி போன்றவற்றை கர்ப்பிணிகள் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முட்டைகள் – Eggs

முட்டைகள் Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்பிணிகளின் சிறந்த ஊட்டச்சத்து ஆதாரம் முட்டை தான். முட்டையை கர்ப்பிணிகள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முட்டையை நீங்கள் புர்ஜி, ஆம்லெட், முட்டை தோசை, முட்டை பரோட்டாவாக சாப்பிடலாம்.

மீன்கள்

சால்மன் மீன் Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

சால்மன் மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி குழந்தைக்கு மட்டுமின்றி, கர்ப்பிணியின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. சால்மன் மீனை வேகவைத்தோ, வறுத்தோ அல்லது மீன் குழம்பாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

தயிர் – Curd

தயிர் Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

தயிர் சுவைக்காக மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கும் தயிர் உதவுகிறது. தயிர் சிறந்த புரோபயாடிக், கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். தயிரை வெறும் வாயில் அப்படியே கூட நீங்கள் சாப்பிடலாம். இல்லையெனில், லஸ்ஸி, தயிர் சாதம் மற்றும் மோர்க் குழம்பு வடிவத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

​வாழைப்பழங்கள்

banana 8 Thedalweb கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் போலேட் நிறைந்து உள்ள வாழைப்பழத்தை கர்ப்ப காலம் முழுவதும் தினமும் கர்ப்பிணிகள் உட்கொள்ளலாம். அதேவேளையில், கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் பெண்கள் அதிக அளவு வாழைப்பழங்களை உட்கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

#கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

#Foods that pregnant women should eat

Yogurt is beneficial for pregnant women in terms of taste and health. It is a good source of probiotics, calcium, and vitamin D for both the baby’s development and the mother’s health. Salmon can be consumed in grilled, baked, or steamed form. ## Curd Curd not only enhances the taste but also contributes to the health of pregnant women. Curd is an excellent probiotic, rich in calcium, and a great source of vitamin D. You can consume curd as it is or in the form of buttermilk, curd rice, and mor kuzhambu. ## Bananas Pregnant women can include ripe bananas in their daily diet as they are rich in carbohydrates, fiber, and potassium. However, women with gestational diabetes should avoid consuming excessive amounts of bananas.

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்