Last Updated : 15 Nov, 2024 09:43 AM
Published : 15 Nov 2024 09:43 AM
Last Updated : 15 Nov 2024 09:43 AM
அஜித் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே…’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு பார்வையாளர்களை ‘ஜர்க்’ ஆக்கி வருவதுதான் அந்த புது பாணி. இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பலரும் புலம்புகிறார்கள்.
‘விடாமுயற்சி’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளதால் படத்தின் ‘அப்டேட்’டை தெரிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும் கவன ஈர்ப்பு மந்திரம்தான், இந்தக் ‘கடவுளே அஜித்தே…’ கூச்சல். தாங்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் ‘கடவுளே அஜித்தே…’ எனச் சொல்ல வைத்த புண்ணியவான்களின் எந்த ‘விடாமுயற்சி’க்கும் பலன் கிடைத்தபாடில்லை!
போட்டியாளர் ‘தளபதி’ அரசியலில் குதித்துவிட்ட நிலையில் ‘தல’யின் இருப்பைக் காட்டவே அவருடைய ரசிகர்கள் இதைச் செய்வதாக நெட்டிசன்கள் வறுக்கிறார்கள். அதேசமயம் தங்களது ஆதர்ச நாயகனின் படம் குறித்த தகவலைக் கேட்பது ரசிகர்களின் உரிமைதானே என்கிற ஆதரவுக் குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. ரசிகர்கள் இனிமேல் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்கிறார் அஜித். ரசிகர்களோ ஒரேயடியாக அவரை கடவுளாகவே ‘புரொமோட்’ செய்துவிட்டார்கள்!
FOLLOW US
தவறவிடாதீர்!