20 கோடி ரூபாயை வரும் 13ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் `சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா’. மிகப் பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்றுப் புனைவாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
![கங்குவா: `படத்தை வெளியிடக்கூடாது' நிபந்தனை விதித்த நீதிமன்றம்... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..! 1 ரெரெ43 Thedalweb கங்குவா: `படத்தை வெளியிடக்கூடாது' நிபந்தனை விதித்த நீதிமன்றம்... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..!](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-26/2n4mdtnn/ரெரெ43.jpg)
வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்காலச் சம்பவங்களை இணைத்து வித்தியாசமான படைப்பை இயக்குநர் சிவா உருவாக்கியிருக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 20 கோடி ரூபாயை வரும் 13ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கங்குவா படத்துக்கு பைனான்ஸ் கொடுத்த அர்ஜுன் லால் என்பவர் மரணமடைந்துவிட்டார். அவரது சொத்துக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரிடம் கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்கும் பணிகளையும் நீதிமன்ற சொத்தாட்சியார் செய்து வருகிறார். அவரிடம் இருந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது.
![கங்குவா: `படத்தை வெளியிடக்கூடாது' நிபந்தனை விதித்த நீதிமன்றம்... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..! 2 Screenshot 574 Thedalweb கங்குவா: `படத்தை வெளியிடக்கூடாது' நிபந்தனை விதித்த நீதிமன்றம்... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..!](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/f0dae885-d47c-4205-a1b1-a9748fe7caa7/Screenshot__574_.png)
அந்த கடன் 20 கோடி ரூபாயை வரும் 13ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். அதை செலுத்தாமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் கடைசி நேரத்தில் ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb