null
`ஒரு டைரக்டராக பார்க்கும் போது..!’ - மகள் அதிதி, மகன் அர்ஜித் குறித்து நெகிழும் ஷங்கர் | director shankar shares about his son and daughter

`ஒரு டைரக்டராக பார்க்கும் போது..!’ – மகள் அதிதி, மகன் அர்ஜித் குறித்து நெகிழும் ஷங்கர் | director shankar shares about his son and daughter


“30 வருடங்கள் 15 திரைப்படம். இன்னும் கூடுதலாக படம் செய்திருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?”

 “அப்படி இல்லை. நான் இவ்வளவு செய்ததே பெரிய விஷயம்தான். பண்ண முடியல, இன்னும் நிறைய திரைப்படங்கள் செய்து இருக்கலாம். செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இல்லை. சில படங்களுக்கு மூன்று வருடங்கள் ஆனது துரதிஷ்டவசமானது. அது என்னுடைய கன்ட்ரோலில் இல்லாமல் ஒன்றரை வருடத்தில் முடிக்க முடியாமல் மூன்று வருடங்கள் ஆனது எனக்கு எதிர்பாராமல் நடந்தது. சில படங்களுக்கு கால அவகாசம் கூடுதலாக தேவைப்பட்டது. அப்படி ஆகாமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் திரைப்படங்கள் செய்திருக்கலாம். இதுதான் ரியாலிட்டி. நம்ம நினைக்கிற மாதிரியே தான் நடக்கிறதா, அது ஒன்று நடக்கும். அது போற போக்கிலே நாம் சென்று நாம் நம்முடைய பணியை செய்ய வேண்டும்.”

 “தமிழ் சினிமாவில் அதிதி கலக்கிக்கொண்டிருக்கிறார். அர்ஜித் அவர்கள் முருகதாஸ் சாரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்கிறார். அவர்களைப் பற்றி டிஸ்கஸ் செய்வீர்களா?”

“அவர் என் கூடவே ஒர்க் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ரொம்ப இன்டெலிஜென்ட்டான பையன். ஆனால் என்னிடம் ஒர்க் செய்தால் அவனை அசிஸ்டன்ட் டைரக்டராக ட்ரீட் செய்ய மாட்டார்கள். டைரக்டர் உடைய பையன் எனும் பொழுது அவருக்கு ஏதாவது ஒரு சலுகைகள் கொடுத்து எதுவும் கத்துக்க முடியாமல் போய்விடும் என்ற தயக்கம் இருக்கிறது. அதனால்தான் வேறு யாரிடமாவது வொர்க் செய்தால் நல்லது என்று நினைத்தேன். அவர் இரண்டு ஷெடுலில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணி செய்தார்.

முருகதாஸ் சாரிடம் வொர்க் செய்துவிட்டு, வரும்பொழுது சினிமா என்றால் என்ன என்று அவருக்கு தெரிந்து விடுகிறது. இங்கே வரும்பொழுது அவருடைய பிஹேவியர் ரொம்ப அருமையாக இருந்தது. ஒரு அசிஸ்டன்ட் டைரக்டராக பணி செய்தார். எல்லாரும் அவரை டைரக்டர் பையன் என்று ட்ரீட் செய்தாலும், அவர் ரொம்ப தெளிவாக என்னுடைய லிமிட் இதுதான் இதிலிருந்து நான் மாறக்கூடாது என்று சொன்ன வேலையை சரியாக செய்து முடித்தார். சில நேரங்களில் மைக்கில் கூப்பிடும் பொழுது சார் என்று சொன்னார். வெரி ஸ்வீட் பாய், எல்லாரையும் இம்ப்ரஸ் செய்து விட்டார். துருதுருவென ஓடி எல்லா வேலையும் செய்து முடித்துவிட்டு, நெக்ஸ்ட் என்ன என்று வந்து நிற்பார்.

நல்ல ஸ்கிரிப்ட் வந்தது என்றால், ஆக்டிங்லயும் அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கிறது. நல்ல டான்ஸ் ஆடுவார். ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார். டைம் வரட்டும் அப்போது ஒவ்வொன்றாக வெளியே தெரிய வரும். மிகவும் திறமையான பையன்.”



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *