``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மோகினி டே

“ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மோகினி டே


‘ஆழமாக நேசித்தப்போதிலும் கணவரை பிரிகிறேன்’ என்று கடந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி அவர்களது விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஏ.ஆர் ரஹ்மானின் பேசிஸ்ட் மோகினி டே தனது விவகாரத்தை அறிவித்ததையொட்டி, ஏ.ஆர் ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்திற்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

Screenshot 2024 11 26 091400 Thedalweb ``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மோகினி டே
மோகினி டே

இந்த நிலையில், நேற்று முன்தினம் சாய்ரா, “என் உடல்நிலை காரணமாகத் தான் இந்த முடிவு. ரஹ்மான் நல்ல மனிதர். அவர் உலகத்திலேயே சிறந்த மனிதர்” என்று ஆடியோ வெளியிட்டிருந்தார்.

இன்று காலை ஏ.ஆர் ரஹ்மான் – மோகினி டே குறித்து வெளியாகி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுப்போன்று, “சுற்றுலாவை முடித்துவிட்டு நான் இப்போது தான் திரும்பியிருக்கிறேன். எனக்கு நிறைய அப்பா மாதிரியான மனிதர்கள் மற்றும் ரோல் மாடல்கள் இருக்கின்றனர். அவர்கள் என் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதற்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன். அப்படியான ஒருவர் தான் ஏ.ஆர் ரஹ்மான். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் என் அப்பாவை போன்றவர். அவர் என் அப்பாவை விட சற்று வயது குறைந்தவர் தான். அவர் மகளுக்கும், எனக்கும் ஒரே வயது என்று நினைக்கிறேன்.

New Project 4 Thedalweb ``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மோகினி டே
மோகினி டே

எங்கள் இருவருக்கும் பரஸ்பர அன்பும், மரியாதையும் உண்டு. அவரது பேண்டில் எட்டரை ஆண்டுகள் பேசிஸ்டாக பணியாற்றி உள்ளேன். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கே பல பாப் பேண்டில் பணிபுரிந்திருக்கிறேன்… பணிபுரிகிறேன். எனக்கும் சொந்த பேண்ட் உள்ளது. இது எங்கள் தனிப்பட்ட விஷயம். தயவு செய்து அன்பாகவும், மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். இது மிகவும் வலி மிகுந்த பிரசாஸ். அதனால், தயவு செய்து அன்பாக இருங்கள்” என்று மோகினி டே வீடியோ வெளியிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *