ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிக்கந்தர்’. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தினை சாஜித் நாடியாவாலா தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமாகிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சனிக்கிழமை (டிச.28) வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகப் போகும் முருகதாஸ் படம் என்பதால் ‘சிக்கந்தர்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிலும் இந்தியில் ‘கஜினி’ பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு முருகதாஸ் மீண்டும் களமிறங்கியுள்ளார். இது முழுக்க முழுக்க பக்கா மாஸ் ஆக்ஷன் திரைப்படம் என்பதை டீசர் உறுதி செய்கிறது. ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழையும் சல்மான் கான் அங்கு முகமூடி அணிந்தபடி வரிசையாக நிற்கும் வில்லன்களை தனது ரைஃபிள் ரக துப்பாக்கியால் துவம்சம் செய்கிறார். டீசர் முழுக்கவே இது மட்டும்தான் என்றாலும் சல்மான் கானின் திரை ஆளுமை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் தீம் இசை ஈர்க்கிறது. ‘சிக்கந்தர்’ டீசர் வீடியோ: