நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜப்பான் சென்றிருந்த நடிகை மீனா, அங்கு தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மீனா கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார்.
அடுத்து தெலுங்கில் வெளியான ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்தார்.
2022-ல் மலையாளத்தில் ஓடிடியில் வெளியாகி ஹிட்டடித்த ‘ப்ரோ டாடி’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார்.
2 ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்தப் படத்தையும் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் அண்மையில் ஜப்பானில் நடைபெற்றது.
இதில் நடிகை மீனா, குஷ்பு, சரத்குமார், சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.
இந்த ஜப்பான் பயணத்தில் நடிகை மீனா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை மீனா நடிப்பில் அடுத்ததாக ’அனந்தபுரம் டைரீஸ்’ மலையாள படம் வெளியாக உள்ளது.