23 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிற முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் “சுந்தரா டிராவல்ஸ்’. இப்போதும் ஓட்டை ஒடிசலான ஒரு பேருந்தைக் கண்டால் “என்னது சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸு மாதிரி இருக்கு” என்றுதான் கிண்டலடிக்கிறார்கள்.
அப்படித்தான், சமூகவலைதளங்களில் இப்போதும் மீம்ஸ் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முரளி, வடிவேலு, ராதா கூட்டணியில் ஒரு பேருந்தை மையமாக எடுத்து வெளியான இப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. அதுவும், சென்டிமென்ட், சீரியஸ் என உணர்வுப்பூர்வமாக நடிக்கும் முரளிக்குள் இவ்வளவு காமெடி சென்ஸ் இருக்கா? என தமிழ் சினிமா ரசிகர்களைப் பிரமிக்கவைத்து, ‘இதய நாயகன்’ முரளியை காமெடி ட்ராக்கில் பயணிக்க வைத்த படம். தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் ஃபாஸ்ட்’ கருணாஸ் – கருணாகரன் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் நாயகி ராதாவிடம் பேசினேன்.
“இத்தனை வருடங்கள் ஆனாலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ இப்போ ரிலீஸ் ஆன மாதிரிதான் இருக்கு. நான், தெலுங்குல ரெண்டு படம் நடிச்சிருந்தாலும் தமிழ்ல என்னோட முதல் படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’ தான். முதல் படமே ஹிட் அடிச்சது, பெரிய ஆசீர்வாதம். எல்லோரும் வாய்ப்பு கிடைக்க ரொம்ப க்ஷ்டப்பட்டதா சொல்வாங்க. அப்படி, நான் எந்த கஷ்டமும் படல.