``என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' - நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்! | actor ponvannan opens up about his personal life

“என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!” – நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்! | actor ponvannan opens up about his personal life


நம்மிடையே பேசிய பொன்வண்ணன், “ உப்பு புளி காரம் வெப் சீரிஸ் முடிஞ்சதும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கலாம்னுதான் திட்டமிட்டேன். அந்த சீரிஸ் பண்ணீட்டு இருக்கும்போதுதான் இந்த `கெட்டி மேளம்’ சீரியலோட வாய்ப்புக் கிடைச்சது. சொல்லப்போனால், இந்த சீரியலோட வாய்ப்பை முதல்ல நிராகரிச்சேன். 25 வருஷமாக நான் சின்னத்திரையில நடிச்சிட்டிருக்கேன். `அண்ணாமலை’, `மர்மதேசம்’ மாதிரியான சீரியஸ்கள்ல நடிச்சிருக்கேன். வெப் சீரிஸ்னு வரும்போது இப்போ சமீபத்துல `ஐந்தாம் வேதம்’ சீரிஸ்ல நடிச்சிருந்தேன். பிறகு, `உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் பண்ணினேன்.

இந்த சீரிஸுக்குப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைச்சது. சொல்லப்போனால் ஒரு வெப் சீரியல் மாதிரி குடும்பங்களுக்கு இந்த சீரிஸ் அவ்வளவு ஃபேவரைட் ஆகிடுச்சு. பொதுவாக, வெப் சீரிஸ் பார்க்கிறவங்க தனியாக உட்கார்த்து ஒவ்வொரு எபிசோடாக பார்பாங்க. ஆனால், `உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் குடும்பத்தோட எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கணும்னு ஒரு மனநிலையை உருவாக்கியிருக்கு. இந்த சீரிஸுக்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கிறதுதான் திட்டம். ஆனால், இந்த சீரிஸுக்குப் பிறகு இப்படியான ஒரு ப்ராஜெக்ட் பண்ணினால் நல்லா இருக்கும்னு யோசிருப்போம்ல அந்த மாதிரியே இந்த `கெட்டி மேளம்’ சீரியல் கதாபாத்திரமும் இருந்தது.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *