பழங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய
வெயில் காலம் தொடங்கியாச்சு வெயில் காலத்துல வீட்டில் எது இருக்குதோ இல்லையோ நிறைய பழங்கள் அவசியம் இருக்கணும். பொதுவாகவே அந்தந்த காலத்தில் உற்பத்தி ஆக கூடிய பழங்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது உடல் நிலையை பாதுகாப்பாக வைத்து கொள்ளும். பருவ நிலைக்கு ஏற்ப சாப்பிட கூடிய பழ வகையும் மாறுபடும்.
குளிர் காலத்தில் பொதுவாகவே பழங்களை நாம் அதிக அளவில் சாப்பிட மாட்டோம். ஆனால், வெயில் காலங்களில் ஏராளமான பழங்களை சாப்பிடுவோம். முக்கியமாக நீர்சத்து அதிகம் கொண்ட பழங்களை வெயில் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நமது உடல் நிலை அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பழங்களை வாங்கும் போது தான். பழங்களை அப்படியே வாங்கி விட கூடாது. ஒவ்வொரு பழத்தின் தன்மையையும் அறிந்து அதன் பின்னர் வாங்க வேண்டும். இந்த பதிவில் பழங்களை வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி அறிந்து கொள்வோம்.
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களை வாங்கும் போது அவற்றின் தோலின் பதத்தை வைத்து நம்மால் இதன் தன்மையை அறிந்து கொள்ள இயலும். இதன் தோல் மென்மையாகவும், உட்பகுதி சற்று கடினமாகவும் இருந்தால் அது நல்ல பழம். ஆனால், இதுவே இதன் தோல் மிகவும் கடினமாக இருந்தால் அவற்றை வாங்கி விடாதீர்கள்.
வாழைப்பழத்தை அவசியம் பார்த்து பார்த்து தான் வாங்க வேண்டும். காரணம் சில வகையான புள்ளி போட்ட வாழைப்பழங்கள் நமது ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.எனவே, பார்ப்பதற்கு அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழத்தை வாங்கலாம். அத்துடன் பழத்தை லேசாக அழுத்தி பார்த்தும் வாங்கலாம்.
வெயில் காலங்களில் பெருமளவு வெள்ளரியை தான் வாங்கு சாப்பிடுவோம். வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பழம் இரண்டுமே அதிக நீர்சத்து கொண்டவை தான். வெள்ளரிப்பழத்தை அதன் தோல் பகுதி மற்றும் உட்பகுதியை அழுத்தி பார்த்து வாங்கலாம். தோல் பகுதி மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சிறந்த பழம்.
விலை உயர்ந்த பழங்களில் மாதுளையும் ஒன்று. மாதுளையை வாங்கு போது சற்று கவனம் தேவை. மாதுளையின் தோல் வெளிர்ந்தோ அல்லது மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருந்தால் அவற்றை வாங்கலாம். மேலும், பழத்தை அழுத்தி பார்க்கும் போது கடினமாக இருந்தால் அது நல்ல பழமாகும்.
விலை உயர்ந்த பழங்களில் இதுவும் ஒன்று. ஆப்பிளின் வெளி பகுதி அதிக சிவப்பு நிறத்துடனும், பளபளப்பாகவும் இருந்தால் அது நல்ல பழம். பழத்தை அழுத்தி பார்க்கும் போது உட்பகுதி மிகவும் கொழ கொழவென்று இருந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்.
மாம்பழத்தை வாங்கும் போது அதன் வாசனை மற்றும் தோலின் நிறம் மிக முக்கியமானது. இது சில வகை மாம்பழங்களை வேறுபடலாம். இதன் முனை காம்பில் வாசனை மிகுதியாக இருந்தாலோ, பழத்தை தொட்டு பார்க்கும் போது மென்மையாக இருந்தாலோ அதனை வாங்கலாம்.
வெடிப்பு, கீறல்கள், புள்ளிகள் தர்பூசணியில் மீது இல்லாமல் இருந்தால் அது நல்ல பழத்திற்கான அறிகுறி. மேலும், பழத்தின் அளவு மிக முக்கியமானது. மிக பெரிய அளவில் தர்பூசணியை வாங்குவதை விட மிதமான அளவில் இருக்கும் தர்பூசணியை வாங்குவது நல்லது.
அன்னாச்சியின் வாசனையை வைத்து தான் அது நல்ல பழமா? இல்லையா? என்பதை கண்டறிய இயலும். அன்னாசியில் இல்லை பகுதி பார்ப்பதற்கு பச்சையாகவும், மொறுமொறுவென்றும் இருந்தால் அது நல்ல பழம் என்று அர்த்தம். இவற்றின் இலைகள் பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் இருந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்.
எல்லா இடங்களில் இந்த பழத்தின் மீது ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். எந்தவித கரும்புள்ளிகளோ, கீறல்களோ இருத்தல் கூடாது. மேலும், பழத்தின் மேற்பகுதி மிகவும் மென்மையானதாக இருத்தல் வேண்டும்.