"உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?" - கமலுடனான சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த சிவராஜ் குமார்

"உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?" – கமலுடனான சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த சிவராஜ் குமார்


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிகர் கமல்ஹாசன் குறித்து நெகிழ்ந்துப் பேசியிருக்கிறார்.

கமல்ஹாசன் குறித்து பேசிய சிவராஜ் குமார், “சிறிய வயதில் இருந்து கமல் சார் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.

ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிவராஜ் குமார்
சிவராஜ் குமார்

என் அப்பாவிடம் யாரு அந்த பையன் என்று கேட்டார். என் மகன்தான் என்று அப்பா சொன்னதும் என்னை அருகே அழைத்தார். நான் அவரிடம், ‘உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?’ என்றேன்.

அவர் உடனடியாக கட்டிப்பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் 3 நாட்கள் அந்த ஸ்மெல் மற்றும் ஆரா (AURA) என்னை விட்டுப் போவிடக்கூடாது என்று நான் குளிக்கவே இல்லை. கமல்ஹாசனை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

நான் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் நிச்சயம் அவரைத் திருமணம் செய்திருப்பேன். அந்தளவுக்கு அவருடைய ரசிகன் நான். புற்றுநோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருந்தப்போது, முதல் ஆளாக எனக்கு ஃபோன் செய்து என்னுடைய நலத்தை விசாரித்ததும் கமல் சார்தான்.

சிவராஜ் குமார்
சிவராஜ் குமார்

அவர் போன்ற ஒரு லெஜன்டை எல்லாம் வாழ்நாளில் நாம் பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *