பொங்கல் விடுமுறைக்கு என்னென்ன படங்கள் வெளியீடு என்பது முடிவாகிவிட்டது. அதற்கான சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விட்டன.
பொங்கல் வெளியீட்டில் இருந்து ‘விடாமுயற்சி’ பின்வாங்கியதை தொடர்ந்து, பல்வேறு படங்கள் ‘பொங்ல் வெளியீடு’ என்று போஸ்டர்களை வெளியிட்டார்கள். இதில் எந்தப் படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக பேசி பொங்கல் வெளியீட்டு படங்கள் என்னென்ன என்பது முடிவாகிவிட்டது.
பொங்கல் விடுமுறை கணக்கில் கொண்டு, ஜனவரி 10-ம் தேதி ‘கேம் சேஞ்சர்’, ‘வணங்கான்’, ‘மெட்ராஸ்காரன்’, ஜனவரி 12-ம் தேதி ’மதகஜராஜா’ மற்றும் ஜனவரி 14-ம் தேதி ’காதலிக்க நேரமில்லை’, ’நேசிப்பாயா’ மற்றும் ’தருணம்’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகிவிட்டது.
மற்ற அனைத்து படங்களும் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டன. இதில் ‘வணங்கான்’ மற்றும் ‘மதகஜராஜா’ ஆகிய படங்கள் மட்டும் வெளியாகுமா என்ற குழப்பம் இருந்தது. அதுவும் சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டுவிட்டது.
இதில் ‘கேம் சேஞ்சர்’ படத்தினை ராக்போர்ட் நிறுவனம், ‘நேசிப்பாயா’ படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதர படங்கள் அனைத்துமே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. ‘நேசிப்பாயா’ படம் கூட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமே திரையரங்குகள் ஒப்பந்தம் நடைபெறுகிறது.