மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். நட்பு வட்டம் விரியும். தாயாருடன் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் யார் விஷயத்திலும் தலையிடாதீர்கள்.
கடகம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை.
சிம்மம்: எதிரிகளை சமாளிப்பீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு. விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபார விஷயமாக விஐபிகளை சந்திப்பீர்கள்.
கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் அனுசரித்து செல்வீர். பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
துலாம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.
விருச்சிகம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.
மகரம்: எதிர்காலம் குறித்த பயம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பொறுப்பு கூடும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.
கும்பம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வியாபாரம் ஏற்றம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரரீதியான பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறாதீர்கள்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |