மேஷம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பணிச்சுமை கூடும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
கடகம்: மனதிலிருந்த பயம் விலகும். பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம் லாபம் தரும்.
கன்னி: எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிக நாட்டம் கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்கள் மகிழ்ச்சியளிக்கும்.
விருச்சிகம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் அனைவருடனும் இணக்கமாக செயல்படுவது நல்லது.
தனுசு: முன்கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தாரிடம் விவாதம் வேண்டாம். அலுவலகத்தில் கோப்புகளை கையாளும்போது அலட்சியம் கூடாது. வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.
மகரம்: பிரியமானவர்களை சந்திப்பீர். நவீன மின்சாதன பொருட்கள் வாங்குவீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றபரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர். ஆரோக்கியம் திருப்தி தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனதில் பட்டதை பேசுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பழைய பணியாட்களை மாற்றுவீர்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |