மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் சரக்குகள் அனைத்தும் விற்று தீரும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.
ரிஷபம்: பழைய கடனை அடைப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரக்கூடும். கையிருப்பு கரையும். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கடகம்: தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. அலுவலக ரீதியான பயணங்கள் திருப்தி தரும். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்காத உறவினர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் பாக்கிகள் ஒவ்வொன்றாக வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும்.
கன்னி: கசப்பான சம்பவங்களை நினைக்காதீர். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் திருப்தி தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
விருச்சிகம்: திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். முன்கோபத்தை கட்டுப்படுத்தவும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரம், அலுவலகத்தில் நிதானமாக செயல்படவும்.
தனுசு: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அலுவலக பணிகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். வியாபாரரீதியாக திடீர் முடிவுகள் வேண்டாம்.
கும்பம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
மீனம்: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். தொழிலில் கடையை விரிவுப்படுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |