மேஷம்: முகப்பொலிவு கூடும். உடற்சோர்வு நீங்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்: சவாலான விஷயங்களை கூட சாதாரணமாக முடித்துக் காட்டுவீர். செல்வாக்கு கூடும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களால் ஆதரவு உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்.
மிதுனம்: பழைய நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொறுப்பு கூடும்.
கடகம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தலைமையிடத்தால் கவனிக்கப்படுவீர்.
சிம்மம்: தடைபட்ட காரியம் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
கன்னி: செலவும், அலைச்சலும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தாமதப்படுத்தவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: பிள்ளைகளுக்காக சேமிக்க தொடங்குவீர். வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலமானவர்களை சந்திப்பீர். புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். விரும்பிய பூர்வீக சொத்தை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
தனுசு: வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் புது முயற்சி வெற்றியடையும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பயணம் சாதகமாகும்.
மகரம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்து காட்டுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றியடையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: மன இறுக்கம், குழப்பங்கள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலக மேலதிகாரியின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்.
மீனம்: களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |