மேஷம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பணப் பற்றாக்குறை ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ரிஷபம்: உங்கள் புகழ், அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியான பயணத்தால் புத்துணர்ச்சி பெறுவீர்.
கடகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முடிவுகளை எடுப்பீர். வியாபாரம். உத்தியோகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
சிம்மம்: எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர், அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
துலாம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வரும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர். அலுவலகத்தில் சக ஊழியர், மேலதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படவும்.
விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். வியாபாரத்தில் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
மகரம்: உடல் சோர்வு வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவதை தாமதப்படுத்தவும்.
கும்பம்: பிள்ளைகளால் பெருமையடைவீர். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த பாடுபடுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |