‘இந்தியன் 2’ படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.
ஜூலை 12-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘இந்தியன் 2’. காட்சியமைப்புகள், வசனங்கள், இசை என அனைத்து விதத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமீபத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளான படம் ‘இந்தியன் 2’ ஆகவே இருக்கும். மேலும், அனைத்து மொழிகளிலுமே இப்படம் படுதோல்வியை தழுவியது.
தற்போது ‘இந்தியன் 2’ விமர்சனங்கள் தொடர்பாக பேட்டியொன்றில் இயக்குநர் ஷங்கர், ”‘இந்தியன் 2′ படத்துக்கு இப்படி விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை, வந்துவிட்டது. அடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்வோம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இந்தியன் 3’ ஓடிடி வெளியீடு குறித்த வதந்திக்கு ”’இந்தியன் 3 கண்டிப்பாக திரையரங்கில் தான் வரும்” என்று பதிலளித்துள்ளார்.
’இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.