தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.
ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட படம் ‘இட்லி கடை’. ஆனால், அந்த தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது. இன்னும் வெளிநாட்டில் படப்பிடிப்பு இருப்பதுதான் தாமதத்துக்கு காரணம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தற்போது புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
அக்டோபர் 1-ம் தேதி ‘இட்லி கடை’ வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜூன் 20-ம் தேதி ‘குபேரா’, அக்டோபர் 1-ம் தேதி ‘இட்லி கடை’ மற்றும் நவம்பர் 28-ம் தேதி ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ளன.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.