சல்மான் கான் நடிகை சங்கீதா பிஜ்லானியை காதலித்தபோது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்தது. திருமண அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனதாக அப்போது கூறப்பட்டது.
இது குறித்து சங்கீதா பிஜ்லானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பெசி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், “உங்களுக்கும், சல்மான் கானுக்கும் திருமணத்திற்கு அழைப்பிதழ் கூட அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையா?” என்று சங்கீதா பிஜ்லானியிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சங்கீதா பிஜ்லானி, “உண்மைதான். அது பொய் கிடையாது என்று தெரிவித்தார்.”
இருவரும் 8 ஆண்டுகள் காதலித்தனர். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் திடீரென நின்றதற்கான காரணம் குறித்து வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் சல்மான் கான் வாழ்க்கையில் திடீரென பாகிஸ்தான் நடிகை சோமி அலி புகுந்ததால்தான் இத்திருமணம் நின்றதாக கூறப்படுகிறது. சோமி அலி அச்செய்தியை பின்னர் உறுதிபடுத்தினார்.
சல்மான் கானுடனான உறவு முறிந்த பிறகு சங்கீதா பிஜ்லானி கிரிக்கெட் வீரர் அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1996ம் ஆண்டு அவர்களது திருமணம் நடந்தது. 14 ஆண்டுகள் நன்றாக சென்று கொண்டிருந்த திருமணம் 2010-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அசாருதீனுக்கு விளையாட்டு வீராங்கனை ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சங்கீதா பிஜ்லானி நிரந்தமாக மும்பைக்கு வந்து குடியேறிவிட்டார். அது முதல் சல்மான் கானும், சங்கீதா பிஜ்லானியும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.!