தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதிலளித்துள்ளார்.
ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வருண், பிக் பாஸ் வர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் கலந்துக் கொண்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் ரவி மோகன்.
அவரிடம் அவரது அடுத்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரவி மோகன், “வேல்ஸ் நிறுவனத்தில் எனது அடுத்த படமான ‘ஜீனி’ தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.
‘பராசக்தி’ படத்தில் எனது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அது ஒரு நல்ல குழு. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு இலங்கை செல்லவுள்ளோம்.
‘கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வருகிறார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.